News October 23, 2025
கோவை: மாநகராட்சி சார்பில் புகார் எண் அறிவிப்பு

கோவையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மழையால் சேதமடைந்த ரோடுகள், ‘வெட்மிக்ஸ்’ கொண்டு சீரமைக்கப்படுகின்றன. எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், மழை தொடர்பான புகார் அளிக்க, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு மையத்தை, 0422 2302323 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News October 24, 2025
கோவையில் வார்டு அளவிலான சிறப்புக் கூட்டங்கள் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் பொதுமக்கள் பங்கேற்புடன் கூடிய சிறப்புக் கூட்டங்கள் வரும் 27, 28, 29 அக்டோபர் தேதிகளில் நடைபெறும் என ஆணையாளர் மா. சிவகுரு பிரபாகரன் இன்று தெரிவித்துள்ளார். இதில் குடிநீர், சாலைகள், தூய்மை, பூங்கா பராமரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதித்து மூன்று முக்கிய கோரிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன.
News October 23, 2025
நான் கெடு விதிக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி!

கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக ஒன்றிணைய 10 நாள் கெடு விதித்தீர்கள் என கேள்வி எழுப்பவே, “நான் 10 நாள் கெடு விதிக்கவில்லை, 10 நாட்களில் பேச்சுவார்த்தை துவங்க வேண்டும். ஒரு மாதத்திலோ அல்லது ஒன்றரை மாதத்திலோ முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தேன். ஆனால் ஊடகத்தில் தான் தவறாக போட்டுவிட்டனர்” என்று தெரிவித்தார்.
News October 23, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

கோவை, பெ.நா.பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் இன்று (அக்.23) இரவு நேர ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உள்ளூர் அதிகாரியை, மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யலாம் என கோவை மாநகர போலீசார், தங்களது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.