News October 23, 2025
வயலூர் முருகன் கோவிலில் திருக்கல்யாண விழா அறிவிப்பு

திருச்சி, வயலூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா நேற்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு சுவாமி நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வரும் 28-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Similar News
News October 23, 2025
திருச்சி: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குறித்த அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நாளை (அக்.24) நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மணப்பாறை 11, 23 ஆகிய வார்டுகளிலும், திருவெறும்பூர் வாழவந்தான் கோட்டை பகுதியிலும், மணிகண்டம் கோனார் சத்திரம் பகுதியிலும், முசிறி ஏவூர் பகுதியிலும், மணப்பாறை ஆலகவுண்டம்பட்டி பகுதியிலும், மருங்காபுரி ஊனையூர் பகுதியிலும் முகாம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
திருச்சி: வீட்டிற்குள் புகுந்த நல்ல பாம்பு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி திருமழபாடி சாலையில் சேகர் என்பவர் வீட்டின் மேல் 4 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்துள்ளது. இதனை கண்ட சேகர் புள்ளம்பாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று பாம்பை உயிருடன் மீட்டு, வனப்பகுதியில் விட்டனர். இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
News October 23, 2025
திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு திருச்சி மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.