News April 17, 2024
கடலூர்: 3-ஆம் கட்ட நீச்சல் பயிற்சி

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள் நேற்று துவங்கி வரும் 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30-ம் தேதி முதல் மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.
Similar News
News January 10, 2026
கடலூர்: வாட்ஸ்அப் வழியாக புக்கிங்!

கடலூர் மக்களே, இனி கேஸ் சிலிண்டர் புக் செய்ய சிரமப்பட வேண்டாம். அதனை வாட்ஸ்அப் மூலமே எளிதாக புக் செய்யலாம். அதற்கு இண்டேன் (Indane): 7588888824, பாரத் (Bharat Gas): 1800224344, ஹெச்பி (HP Gas): 9222201122. மேற்கண்ட உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க
News January 10, 2026
கடலூர்: தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

பண்ருட்டி அடுத்த கீழக்குப்பத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (59). இவரது மனைவி கடந்த 4-ம் தேதி இறந்து போனார். தாயார் இறந்துபோன மனவேதனையில் இருந்த வெங்கடேசனின் மகன் சந்தோஷ்குமார் (33) நேற்று தூக்குபோட்டு கொண்டார். பின்னர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து முத்தாண்டிக்குப்பம் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News January 10, 2026
கடலூர்: வெளிநாடு செல்ல ஆசையா?

கடலூர் மாவட்ட மக்கள் வெளிநாட்டில் வேலைவாய்ப்புகளை பெற அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்ட்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேலை வாங்கி தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபடும் போலி ஏஜெண்ட்களால் ஏமாறாமல் இருக்க, அரசு அங்கீகரித்த ஏஜெண்ட்களை தொடர்பு கொண்டு, பாதுகாப்பான முறையில் வெளிநாடு வேலைவாய்ப்புகளைப் பெறவும். உங்கள் பகுதி ஏஜென்ட்கள் விவரங்களை பெற <


