News October 23, 2025

FLASH: முடிவை மாற்றினார் விஜய்

image

கரூர் சம்பவத்துக்கு, விஜய் தாமதமாக வந்தது, போக்குவரத்து நெரிசல் ஆகியவை காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஜெ., பாணியில் தன்னுடைய பிரசாரத்தை மீண்டும் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக ஒரு நிறுவனத்திடம் 4 ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.

Similar News

News October 24, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (அக்.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News October 24, 2025

iPhone Air மாடல் இனி கிடைக்காதா?

image

ஐபோன் மாடல்களிலேயே மிகவும் மெலிதான iPhone Air மாடல் உற்பத்தியை ஆப்பிள் நிறுவனம் குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில் அப்போன்கள் விற்றுத் தீர்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவித்தாலும், அங்கும் விற்பனை மந்தமாகவே உள்ளது. அதனால், அதற்கு மாற்றாக, அதிக வரவேற்பை பெற்றுள்ள ஐபோன் 17 மற்றும் ஐபோன் 17 ப்ரோ மாடல்களின் உற்பத்தியை ஆப்பிள் அதிகரிக்க உள்ளது.

News October 24, 2025

₹79,000 கோடியில் ராணுவத்திற்கு ஆயுதங்கள்

image

₹79,000 கோடி மதிப்பில் ராணுவத்திற்கு நவீன ஆயுதங்கள் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. மேலும், இதில் உள்நாட்டு தயாரிப்புகளும் அடங்கும். இது இந்திய நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!