News October 23, 2025
விழுப்புரம்: பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

விழுப்புரம் மாவட்ட பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 23, 2025
இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம் செயல்பாடு

விழுப்புரம் போலீசாரின் (அக்.23) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈடுபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்
News October 23, 2025
பெங்களூரில் இருந்து குட்கா கடத்திய 3 பேர் கைது

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பெங்களூரில் இருந்து காரில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மற்றும் ஆம்பூர் கிராமத்தைச் சேர்ந்த கண்ணதாசன், அன்ராயநல்லூர் கிராமத்தை சேர்ந்த சங்கர் ஆகிய 3 பேரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்களிடமிருந்து 1.5லட்சம் மதிப்புள்ள 177 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
News October 23, 2025
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் துறை சார்ந்த ஆய்வு கூட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஏ.ராமன் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் இன்று அக்.23 நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை காவல்துறை நகராட்சி நிர்வாகம் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.