News October 23, 2025
சென்னை பெண்களே.., பிஸ்னஸ் செய்ய செம வாய்ப்பு!

சென்னை பெண்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசை உள்ளவர்களா நீங்கள். உங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் எந்த ஒரு பிணையமுமின்றி ரூ.1 கோடி வரை கடன் ‘சென்ட் கல்யாணி’ திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. உங்கள் தொழிலுக்கான 80 சதவீத கடனை வங்கியே வழங்கும். இதுகுறித்து விண்ணப்பிக்க, விவரங்கள் அரிய அருகே உள்ள செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா அலுவலகத்தை அணுகவும். உடனே இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News October 23, 2025
’நாங்கள் மழைக்கு தயார்!’ – மேயர் பிரியா

சென்னையில் கடந்த 2 நாட்களில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து பேசிய மாநகராட்சி மேயர் பிரியா, ’அதிக மழைக்கு தயாராக இருக்கிறோம். இராயபுரம் மண்டலத்தில் 9 மீட்பு முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. 5 சுரங்க பாதைகள் சீரமைக்கப்பட்டு, மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1.50 லட்சம் பேருக்கு காலை உணவும், 2.30 லட்சம் பேருக்கு மதிய உணவும் வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.
News October 23, 2025
தூய்மை பணியாளர்களுக்கு இலவச உணவு!

சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு காலை, மதியம் மற்றும் இரவு உணவு வழங்குதல் தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சியில் 3 வேளையும் இலவச உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
News October 23, 2025
பருவமழை தொடர்பாக துணை முதல்வர் ஆய்வுக் கூட்டம்

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்.23) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பருவமழை தொடர்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தொடர்ந்து ஆய்வுகளின் அடிப்படையில் நடந்துள்ள பணிகள் குறித்தும், செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், மாநகராட்சி, நெடுஞ்சாலை, குடிநீர் வழங்கல், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.