News October 23, 2025

FLASH: பிஹார் CM வேட்பாளரை அறிவித்தது INDIA கூட்டணி

image

பிஹார் சட்டமன்ற தேர்தலில், INDIA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். INDIA கூட்டணியில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், வேட்பாளரை காங்., மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். NDA சார்பில் CM வேட்பாளராக யாரும் களமிறக்கப்படவில்லை. இம்மாநிலத்துக்கான தேர்தல் நவ.6, 11-ல் நடக்கவுள்ளது.

Similar News

News October 23, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தது அறிவிப்பு

image

புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு <<18021492>>டிச.15-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை<<>> வழங்கப்படும் என DCM உதயநிதி அண்மையில் அறிவித்துள்ளார். இதுவரை, 28 லட்சம் பேர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களது மனுக்கள் மீதான களஆய்வு பணிகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. மேலும், நவ.15 வரை விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. அனைத்து பணிகளும் நவ.30-க்குள் முடிந்து டிசம்பரில் புதிய பயனர்களுக்கு பணம் டெபாசிட் செய்யப்படவுள்ளது.

News October 23, 2025

நாடு முழுவதும் SIR.. தேர்தல் அதிகாரிகளுக்கு ECI உத்தரவு

image

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை இறுதி செய்யுமாறு, அனைத்து மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு ECI உத்தரவிட்டுள்ளது. SIR நடத்துவதற்கான தேதி, அடுத்த ஒரு வாரத்தில் இறுதி செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 2026-ல் தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு, அசாம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News October 23, 2025

பாஜக உருவாக்கிய பாடலுக்கு டான்ஸ் ஆடும் விஜய்: கருணாஸ்

image

பாஜக compose செய்த பாட்டுக்கு டான்ஸ் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார் என்று விஜய்யை கருணாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். விரைவில் பாடல் ரெடியாகும் என நினைக்கிறேன். பனையூர் கேட்-ன் பூட்டு வெளியே போட்டுருக்கா, உள்ளே போட்டுருக்கா என பத்திரிகையாளர்கள் தான் பார்க்கணும்; விஜய் மக்களுக்கான தலைவரா என்று அவரை பின் தொடரும் ரசிகர்களும், தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

error: Content is protected !!