News October 23, 2025
DMK ஆட்சியில் அனைவருக்கும் கண்ணீர் பரிசு: RB உதயகுமார்

சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிடுவது போல CM ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக RB உதயகுமார் சாடியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியில், அரசு ஊழியர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவருக்கும் கண்ணீர் மட்டுமே பரிசாக கிடைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். புதிய DGP முதல் மதுரை மேயர் வரை யாரையும் தேர்வு செய்ய முடியாமல் தவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
Similar News
News October 23, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா?

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை உருவாகிறது. இதனால், நாளை கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், மாவட்ட ஆட்சியர்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பொறுத்துதான் விடுமுறையா, இல்லையா என்பது தெரியவரும்.
News October 23, 2025
எகத்தாளமாக பேசியவருக்கு சரியான பதிலடி

சூரி தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவை X-ல் பகிர்ந்திருந்தார். அதில், திண்ணைல கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்துச்சாம் வாழ்க்கை என ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அதற்கு, திண்ணையில் இல்லை நண்பா, பல நாள்களாக ரோட்டில் இருந்தவன் நான். அந்த பாதை தான் வாழ்க்கையின் உண்மையும், மதிப்பையும் கற்று தந்தது. நீயும் உன் வளர்ச்சியில் நம்பிக்கை வைத்தால் வெற்றி பெறலாம் என சூரி பதிலளித்துள்ளார்.
News October 23, 2025
ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இவ்வளவு வசூலா?

கோடிக்கணக்கான மக்களின் பார்வையை பெறும் பதிவுக்கு, பிரபலங்கள் கோடியில் வசூலிப்பதாக கூறப்படுகிறது. அவர்களுடைய ஒவ்வொரு பதிவும், உலகளாவிய விளம்பரமாக உள்ளது. எந்த பிரபலம், எவ்வளவு பெறுகிறார், என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் யாரை பாலோ செய்கிறீர்கள்? கமெண்ட்ல சொல்லுங்க.