News October 23, 2025
கடலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (அக்.22) நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். செம்மண்டலத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும் இந்த முகாமில் 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில், 10-ம் வகுப்பு,12-ம் வகுப்பு ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி படித்த இளைஞர்கள் பங்கேற்று பயன்படலாம் என தெரிவித்துள்ளார்.
Similar News
News October 23, 2025
பயிர் காப்பீடு: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சிட்டா, அடங்கல் உள்ளவர்கள் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை கொண்டு இ-சேவை மையம் வாயிலாக பயிர் காப்பீடு செய்யலாம். மக்காச்சோளத்துக்கு அக்டோபர் 31 வரையிலும், நெல், பருத்தி, உளுந்துக்கு நவம்பர் 15ஆம் தேதி வரையிலும் பயிர் காப்பீடு செய்யலாம் என இன்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
கடலூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா ?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு கடலூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.
News October 23, 2025
கடலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய மழை

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.,23) காலை 8.30 மணி நிலவரப்படி பெலாந்துறை 32.5 மி.மீ, கீழ்செருவாய் 26 மி.மீ, மே.மாத்தூர் 23 மி.மீ, வேப்பூர் 19.1 மி.மீ, காட்டுமைலூர் 19 மி.மீ, தொழுதூர் 16 மி.மீ என மாவட்டம் முழுவதும் 173.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. உங்கள் பகுதியில் மழையா கமெண்ட் பண்ணுங்க!