News October 23, 2025
சேலம் சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். கூடுதல் தொழிலாளர் ஆணையர் – 044-24339934, 9445398810, தொழிலாளர் இணை ஆணையர் – 044-24335107, 9445398802, தொழிலாளர் துணை ஆணையர் – 044-25340601, 9445398695, தொழிலாளர் துறை உதவி ஆணையர் (பெண்கள் நலம்) – 9445398775, தொழிலாளர் உதவி ஆணையர் – 04425342002 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.ஷேர் செய்யுங்க
Similar News
News October 23, 2025
மேட்டூர் ஆணை நிலவரம் குறித்து ஆட்சியர் அறிவிப்பு!

மேட்டூர் அணையின் முழு கொள்ளளவான 120 அடி எட்டியுள்ளது. இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து அதிக அளவு உள்ளதால், தற்போது 45,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மென்மேலும் நீர்வரத்து அதிகம் உள்ளதால் தொடர்ந்து 60,000 கன அடி வரை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாகவும், அதனால் கரையோர மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி எச்சரித்துள்ளார்.
News October 23, 2025
சேலம் மாவட்ட மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!

சேலம் மாவட்டத்தில் பாதுகாப்பு கருதி மாணவர்கள் செய்யக்கூடாதவற்றை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார். ஆறு, குளம், குட்டை பகுதிகளுக்கு செல்லக்கூடாது. நீர் தேங்கியுள்ள பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். பள்ளிகளில் கழிவு நீர் தொட்டிகள் குடிநீர் தொட்டிகள் கிணறுகள் அருகில் செல்லக்கூடாது. சைக்கிளில் செல்லும்போது சகதி பக்கம் செல்லக்கூடாது என கூறினார்.
News October 23, 2025
சேலம் மக்களுக்கு ஆட்சியர் அறிவிப்பு!

தற்போது மாநிலம் முழுவதும் மழை தொடர்ந்து பெய்து வண்ணம் உள்ளது. இதனால் சேலத்தில் மழையின் பாதுகாப்பு கருதி எடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அறிக்கை வெளியிட்டார். காய்ச்சிய குடிநீரை மட்டுமே பருக வேண்டும், காய்கறிகளை அதிக அளவு உண்ண வேண்டும், தேவையான மருந்து பொருட்களை வைத்துக் கொள்ள வேண்டும், மின்சாதன பொருட்களை பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும், என வலியுறுத்தியுள்ளார்.