News October 23, 2025
திமுக எம்எல்ஏ காலமானார்.. CM ஸ்டாலின் இரங்கல்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் திமுக <<18078637>>MLA பொன்னுசாமியின்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இருமுறை MLA-வாக தேர்வாகி பழங்குடியின மக்கள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவரின் இழப்பு திமுகவுக்கு பேரிழப்பு என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், MLA பொன்னுசாமியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 23, 2025
நகை கடன் வாங்கியோருக்கு… முக்கிய தகவல்

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால், நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் (வாடிக்கையாளர்) முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.
News October 23, 2025
ஆந்திர அரிசி இறக்குமதி: சீமான்

தமிழக விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய மறுத்து ஆந்திராவிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படுவதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு பெயர்தான் திராவிட மாடலா என்றும் சாடிய அவர், முதல்வருக்கு அடுக்கடுக்கான கேள்விகளையும் எழுப்பியுள்ளார். விவசாயிகள் அரும்பாடுபட்டு விளைவித்த நெல்மணிகளை விரைந்து கொள்முதல் செய்ய மறுக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கண்டனத்துக்குரியது எனவும் தெரிவித்தார்.
News October 23, 2025
Cinema Roundup: 5 நிமிட பாடலுக்கு ₹5 கோடி சம்பளம் கேட்கும் பூஜா

*வரும் 31-ம் தேதி நெட்ஃபிலிக்ஸ் OTT தளத்தில் ‘இட்லி கடை’ வெளியாக உள்ளது. *அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தில், ஒரு பாடலுக்கு நடனமாட பூஜா ஹெக்டே ₹5 கோடி சம்பளம் பேசியுள்ளாராம். *‘பராசக்தி’ படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். *ஒயின் குடிக்காமல் ஸ்ரீதேவியால் தூங்க முடியாது குட்டி பத்மினி கூறியுள்ளார்.