News October 23, 2025
பருவமழை எதிரொலி: சுமார் 88% தண்ணீர் சேமிப்பு!

தமிழகம் முழுவதும் பெய்து வரும் பரவலான மழையால் அனைத்து நீர்த்தேக்கங்களும் நிறைந்து வருகின்றன. நீர்வள துறை பராமரிப்பில் உள்ள 90 அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவு 224 TMC ஆகும். இதில், தற்போது 196.897 TMC அதாவது 87.77% தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 14, 141 பாசன ஏரிகளில், 1,522 ஏரிகள் 100%, 1,842 ஏரிகள் 76% முதல் 99% வரை நிரம்பியுள்ளன.
Similar News
News October 23, 2025
மரங்கள் ஒன்றோடு ஒன்று பேசும்; எப்படி தெரியுமா?

மரத்தின் வேர்கள் mycorrhizal பூஞ்சைகள் மூலம் பூமியின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு மரத்தின் இலையை பூச்சிகள் சாப்பிட்டு அழித்தால், மரத்தின் வேரில் இருந்து ரசாயன சிக்னல்கள் வெளியேறும். பூஞ்சைகள் இந்த சிக்னலை மற்ற மரங்களுக்கு கடத்தும். இந்த சிக்னல்களை புரிந்துகொள்ளும் பிற மரங்கள் தங்கள் மரத்தின் இலைகள் பூச்சிகள் சாப்பிடாத படி கசப்பாக மாற்றும் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. SHARE.
News October 23, 2025
BREAKING: முக்கிய அமைச்சரை தூக்குகிறாரா CM ஸ்டாலின்?

கனமழையால் சென்னை உள்ளிட்ட இடங்களில் வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் CM ஸ்டாலின், உதயநிதி சுழன்று சுழன்று பணியாற்றி வருகின்றனர். ஆனால், வருவாய் பேரிடர் துறை அமைச்சராக உள்ள KKSSR வெள்ள முன்னெச்சரிக்கை பணிகளில் சுணக்கம் காட்டுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. வரும் தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்க திமுக தலைமை ஆர்வம் காட்டவில்லை என்பதால், மக்கள் பணிகளில் சுணக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.
News October 23, 2025
சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்வரே? நயினார்

தாம்பரம், சோழிங்கநல்லூர், மதுரவாயல் பகுதிகளில் அரசு ஹாஸ்பிடல்கள் அமைக்கப்படும் என சொன்னீங்களே செஞ்சீங்களா முதல்வரே என நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். ₹110 கோடி செலவில் கட்டப்பட்டதாக விளம்பரப்படுத்தும் தாம்பரம் அரசு ஹாஸ்பிடலில் குடிநீர், கழிவறை வசதி கூட இல்லை எனவும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், சோழிங்கநல்லூர், மதுரவாயலில் செங்கலை கூட நாட்டவில்லை என்றும் சாடியுள்ளார்.