News October 23, 2025
+2 போதும்..₹63,200 சம்பளம்; இன்றே கடைசி

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் உள்ள 228 Junior Secretariat Assistant பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 12-வது தேர்ச்சி பெற்ற 30 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 2 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு ₹19,900- ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு அப்ளை பண்ண இன்றே கடைசி நாள் என்பதால் முந்துங்கள். உடனே வேலை தேடுவோருக்கு SHARE THIS.
Similar News
News October 27, 2025
CM பதவியை தக்கவைக்க அமைச்சரவையில் மாற்றம்

கர்நாடகாவில் காங்., ஆட்சி அமைத்தபோது, CM பதவியை சித்தராமையா, DK சிவக்குமார் ஆளுக்கு 2.5 ஆண்டுகள் பங்கிட ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, நவ.20 உடன் சித்தராமையா CM ஆகி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. ஆனால், பதவியை விட விரும்பாத சித்தராமையா, அதற்காக அமைச்சரவையில் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்கு சில அமைச்சர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், நவ.15-ல் டெல்லி மேலிடத்தை சந்திக்கிறார்.
News October 27, 2025
PAK-AFG மீண்டும் மோதல்: 5 பாக். வீரர்கள் பலி

ஆப்கனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்றால் போரை தொடங்குவோம் என பாக்., அமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், ஆப்கன் எல்லையில் மீண்டும் மோதல் வெடித்தது. இந்த மோதலில், 5 பாக்., வீரர்கள், 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாக்., ராணுவம் தெரிவித்துள்ளது. தங்களது எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்றதால் இந்த மோதல் ஏற்பட்டதாக பாக்., ராணுவம் குறிப்பிட்டுள்ளது.
News October 27, 2025
வட தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

மொன்தா புயல் சென்னைக்கு கிழக்கு பகுதியில் 560 கிமீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. முன்னதாக மணிக்கு 16 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த புயலின் வேகம் சற்று குறைந்துள்ளது. புயலின் தாக்கம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழகத்தில் இன்று நாள் முழுவதும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


