News October 23, 2025

BREAKING: இந்தியா பேட்டிங்

image

அடிலெய்டில் நடக்கும் 2-வது ODI-ல் டாஸ் வென்று ஆஸி. அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. முதல் ODI-ல் அடைந்த தோல்விக்கு பழிதீர்க்குமா இந்திய அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி: கில்(C), ரோஹித், கோலி, ஷ்ரேயஸ் ஐயர், KL ராகுல், அக்சர் படேல், சுந்தர், நிதிஷ் ரெட்டி, ராணா, அர்ஷ்தீப் சிங், சிராஜ். இன்று வெற்றி பெறுமா இந்தியா?

Similar News

News October 23, 2025

பிரபல தமிழ் நடிகர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விபத்து

image

கோவையில் நடந்த ‘டியூட்’ பட நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான டியூட் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படக்குழுவினர் ஒவ்வொரு பகுதியாக சென்று ரசிகர்களை சந்திக்கின்றனர். இந்நிலையில், கோவையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதீப் ரங்கநாதன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அவரை நோக்கி இளைஞர்கள் படையெடுத்ததால், தடுப்புகள் சரிந்து விழுந்தது. இதில், சிலர் காயமடைந்துள்ளனர்.

News October 23, 2025

ஆட்சி முடியும் நேரத்தில் நாடகமாடும் CM: அண்ணாமலை

image

மக்கள் வரிப்பணத்தை CM ஸ்டாலின் விளம்பரங்களுக்கு வீணடித்து கொண்டிருப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார். சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என ₹78,000 கோடி செலவிட்டுள்ளதாக அரசு கூறுகிறது; ஆனால் பல கிராமங்களில் இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதாகவும் சாடியுள்ளார்.

News October 23, 2025

Vampire: இது ஒன்னும் புது கதையல்ல…

image

‘லோகா’வை தொடர்ந்து Vampire கதைக்களத்துடன் வெளிவந்துள்ள ‘தம்மா’ திரைப்படமும் நல்ல வசூலை குவித்து வருகிறது. பேய், சாமி, சூப்பர்ஹீரோவை தொடர்ந்து இந்திய சினிமா இப்போது Vampire கதைக்களத்திற்குள் புகுந்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கு தான் இது புதுசு. ஆங்கிலத்தில் பல படங்கள், வெப் சீரிஸ்கள் Vampire-ஐ மையமாக கொண்டு வெளியாகியுள்ளன. அப்படி மிகவும் பிரபலமான படங்கள், சீரிஸ்கள் பற்றி அறிய மேலே ஸ்வைப் பண்ணுங்க.

error: Content is protected !!