News October 23, 2025
கோவை: கல்வி கற்க கடனுதவி பெற அழைப்பு

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் 100 பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மாணவர்களுக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க கடன் உதவி வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் www.tabcedco.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பி பயன்பெறலாம் என கோவை கலெக்டர் பவன் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 23, 2025
கோவை: டிகிரி போதும்.. India Post-ல் வேலை!

கோவை மக்களே, இந்திய அஞ்சலக பேமென்ட் வங்கியில் 348 நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News October 23, 2025
மின்சாரம் தாக்கியதில் கார் டிரைவர் பலி

கோவை கோவில்பாளையம் அடுத்துள்ள கீரணத்தத்தில் வினோ பிரேம் தாஸ் என்பவர் வாடகை கார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நாங்குநேரியை சேர்ந்த தங்கதுரை டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் காரை கழுவுவதற்காக மின்மோட்டாரை ஆன் செய்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
News October 23, 2025
கோவை: மாநகராட்சி சார்பில் புகார் எண் அறிவிப்பு

கோவையில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மழையால் சேதமடைந்த ரோடுகள், ‘வெட்மிக்ஸ்’ கொண்டு சீரமைக்கப்படுகின்றன. எனவே மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்கள் பகுதிகளில், மழை தொடர்பான புகார் அளிக்க, மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செயல்படும் அவசர கட்டுப்பாட்டு மையத்தை, 0422 2302323 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.