News October 23, 2025

சென்னையில் கொடூரத்தின் உச்சம்!

image

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் உபேந்திர குமார்(41) மந்தைவெளியில் உள்ள சலூன் கடை ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் 6-வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் உபேந்திர குமாரை பிடித்து மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசாரிடம் நேற்று ஒப்படைத்தனர். போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசாரை அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 23, 2025

சென்னை: கடற்கரையில் பரவும் வெண் நுரைகள்!

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூவம் ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் கூவம் ஆற்றில் தேங்கிக் கிடந்த ரசாயன கழிவுகளும், ஆகாய தாமரையும் அடித்துச் செல்லப்பட்டு பட்டினப்பாக்கம் அருகே கடலில் கலந்து வருகின்றன. இதனால் மலைபோல் வெண் நுரைகள் உருவாகி பட்டினப்பாக்கம் முதல் சீனிவாசபுரம் வரை கடற்கரையோரம் படர்ந்துள்ளது.

News October 23, 2025

சென்னை: கனமழை களப்பணியில் 22 ஆயிரம் பேர்

image

சென்னையில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு மையத்திற்கு(1913) மக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருவமழையை முன்னிட்டு, பொறியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்பட 22 ஆயிரம் பேரும் சென்னை குடிநீர் வாரியத்தின் மூலம் 2,149 பேரும் களப் பணியாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

News October 23, 2025

தண்ணீரில் மூழ்கி 2 வயது சிறுமி பலி!

image

சென்னை: மாங்காடு ஜனனி நகரைச் சேர்ந்த பிரினிகா ஸ்ரீ(2) வீட்டின் அருகே இருந்த காலிமனையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை காணாமல் போன நிலையில், இருந்த காலிமனையில் தேங்கியிருந்த தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!