News October 23, 2025
நல்லா தூங்கினாலும், சோர்வாகவே இருக்கா?

இரவில் நன்றாக தூங்கினாலும், காலையில் சோர்வாகவே இருக்கீங்களா? இதனை சாதாரணமாக எடுக்க வேண்டாம். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மன அழுத்தம், தைராய்டு பிரச்னை, மதுபழக்கம், இரும்பு சத்து குறைபாடு, தூங்கும் மெத்தை சரியில்லாமல் இருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்றாங்க. இதை சரி செய்யவில்லை என்றால் நாளடைவில் இதய பிரச்னைகள் வரலாம். உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE.
Similar News
News October 23, 2025
பைசனில் என்னையே பார்க்கிறேன்: அண்ணாமலை

தீபாவளிக்கு வெளியான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த அண்ணாமலை, பல காட்சிகளில் தன்னையே பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது என தெரிவித்துள்ளார். மேலும், தடைகள் அனைத்தையும் கடந்து சாதித்து காட்டிய மணத்தி கணேசன் கதையை மாரி செல்வராஜ் சிறப்பாக காட்டியிருக்கிறார் எனவும், சமூகத்தில் ஒற்றுமை வேண்டும் எனவும் பதிவிட்டிருக்கிறார்.
News October 23, 2025
டிரம்ப்-ஐ Avoid செய்யும் முடிவில் PM மோடி?

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப் , PM மோடியை போனில் அழைத்து வாழ்த்து கூறியதோடு, பாக்., போர் குறித்து பேசியதாக தெரிவித்திருந்தார். ஆனால், Call-ல் அப்படி எதுவும் பேசப்படவில்லை என வெளியுறவுத்துறையில் சிலர் கூறுகின்றனர். டிரம்ப் தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களை செய்வதால் PM மோடி அப்செட் ஆகியிருக்கிறாராம். இதனாலேயே ஆசியன் மாநாட்டில் அவர் நேரடியாக <<18078238>>பங்கேற்கவில்லை<<>> என கூறப்படுகிறது.
News October 23, 2025
IND vs NZ: இந்தியா பேட்டிங்

மகளிர் ODI உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.