News October 23, 2025
ரயில் குறித்த போலி செய்திகள்.. இனி ஏமாற வேண்டாம்!

ரயில் ரத்தாகி விட்டது, ரயிலில் சாப்பாடு, தண்ணீர் சுத்தமாக இல்லை என பல போலியான சர்ச்சை வீடியோக்களும், கருத்துக்களும் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது. ஆனால், இனி இப்படியான போலி செய்திகளால் ஏமாற வேண்டாம். இந்திய ரயில்வே சார்பில் Fact Check தளம் தொடங்கப்பட்டுள்ளது. சந்தேகத்திற்கிடமான செய்திகள் பரவினால், அதனை @IRFactcheck என்ற பேஜில் டேக் செய்து, உண்மையை அறிந்து கொள்ளலாம். இதனை அனைவருக்கும் பகிரவும்.
Similar News
News October 23, 2025
டிரம்ப்-ஐ Avoid செய்யும் முடிவில் PM மோடி?

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப் , PM மோடியை போனில் அழைத்து வாழ்த்து கூறியதோடு, பாக்., போர் குறித்து பேசியதாக தெரிவித்திருந்தார். ஆனால், Call-ல் அப்படி எதுவும் பேசப்படவில்லை என வெளியுறவுத்துறையில் சிலர் கூறுகின்றனர். டிரம்ப் தொடர்ந்து இதுபோன்ற விஷயங்களை செய்வதால் PM மோடி அப்செட் ஆகியிருக்கிறாராம். இதனாலேயே ஆசியன் மாநாட்டில் அவர் நேரடியாக <<18078238>>பங்கேற்கவில்லை<<>> என கூறப்படுகிறது.
News October 23, 2025
IND vs NZ: இந்தியா பேட்டிங்

மகளிர் ODI உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. தொடர்ந்து 3 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள இந்திய அணி, இன்றைய போட்டியில் வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெறும். ஏற்கெனவே ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
News October 23, 2025
டிரெண்டிங்கில் Retirement!

இன்றைய போட்டியில் டக் அவுட்டாகி வெளியேறும் போது, கோலி ரசிகர்களை நோக்கி, பேட்டை லேசாக உயர்த்தி சைகை காட்டிவிட்டு சென்றார். ஆஸி., தொடர் தான் அவரின் ODI எதிர்காலத்தை தீர்மானிக்கும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்த நிலையில், ஓய்வைதான் கோலி சூசகமாக அறிவித்துவிட்டார் என கமெண்ட்ஸ் பறக்கிறது. X தளத்திலும் ‘Retirement’ டிரெண்டடித்து வருகிறது. இந்த வீழ்ச்சியில் இருந்து மீள்வாரா கோலி?