News October 23, 2025

தென்காசி: மழைக்காலத்தில் இந்த App தேவை

image

தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் வெளியிட்ட அறிக்கையில், தென்காசி மாவட்டத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் இயற்கை வானிலையை முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவும் TN-Alert App ஐ பதிவிறக்கம் செய்து பயனடையலாம். பேரிடர் காரணமாக புகார்களை பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இது உதவும். மேலும் விபரங்களுக்கு இங்கே <>கிளிக்<<>> செய்யவும்.

Similar News

News October 23, 2025

தென்காசி: ரூ.2 லட்சம் வரை சம்பளத்தில் வேலை., இன்றே கடைசி

image

தென்காசி மக்களே, மத்திய அரசின் கீழ் செயல்படும் EMRS பள்ளிகளில் பல்வேறு பணிகளுக்கு இந்தியா முழுவதும் 7267 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு, 12th, டிப்ளமோ, டிகிரி, நர்சிங் என அந்தந்த பணிகளுக்கு ஏற்ப கல்வித்தகுதி கொண்டிருக்க வேண்டும். சம்பளம் – ரூ.18,000 முதல் ரூ.2,09,200 வரை. இன்றே கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கு <>கிளிக்<<>> செய்யவும். இப்பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.

News October 23, 2025

தென்காசிக்கு முதல்வர் வருகை

image

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வருகிற 29ம் தேதி தென்காசி மாவட்டம் வருகிறார். அவருக்கு ஆலங்குளத்தில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. ஆலங்குளத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், எஸ்.பி.அரவிந்த் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது திமுக மாவட்ட செயலாளர்கள் ஜெயபாலன், ஆவுடையப்பன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

News October 23, 2025

தென்காசி: 10th முடித்தால் கிராம ஊராட்சியில் வேலை

image

தென்காசி மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,483 காலியிடங்கள் உள்ளது. <>மாவட்ட வாரியாக <<>>பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10th கல்வித்தகுதி உடைய 18 வயது நிரம்பியவர்கள் www.tnrd.tn.gov.in-ல் நவ. 9க்குள் கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400 வரை. சொந்த ஊரில் அரசு வேலை. உடனே SHARE பண்ணுங்க.

error: Content is protected !!