News October 23, 2025

பெரம்பலுர்: உதவித்தொகைக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

image

பெரம்பலூர், மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் யாசஸ்வி கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தில் பயன்பெற மாணவர்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க (நவம்பர் 15) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 23, 2025

பெரம்பலுர்: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

பெரம்பலுர் மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது <>அதிகாரப்பூர்வ <<>>இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News October 23, 2025

பெரம்பலூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

image

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தாலுகா, சட்டமன்ற தொகுதிகள், பேருராட்சிகள் என்னென்ன இருக்கின்றது என உங்களுக்கு தெரியுமா?

✅4 தாலுகா
1.பெரம்பலூர்
2.குன்னம்
3.வேப்பந்தட்டை
4.ஆலத்தூர்

✅2 சட்டமன்ற தொகுதி
1.பெரம்பலூர் (தனி)
2.குன்னம்

✅1 நாடாளுமன்ற தொகுதி
1.பெரம்பலூர்

✅4 பேரூராட்சிகள்
1.அரும்பாவூர்
2.இலப்பைகுடிக்காடு
3.குரும்பலூர்
4.பூலாம்பாடி
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

News October 23, 2025

பெரம்பலூர்: முருகன் கோயிலில் கந்தசஷ்டி பெருவிழா

image

பெரம்பலூர் மாவட்டம், செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள தண்டாயுதபாணி கோயிலில், நேற்று முதல் நாள் கந்தசஷ்டி பெருவிழா நடைபெற்றது. கந்தசஷ்டி பெருவிழாவில் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகர் மற்றும் மூலவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இந்த பெருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

error: Content is protected !!