News October 23, 2025
திருச்சி: பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்

திருச்சி, பெட்டவாய்த்தலை மேலஆரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி ஹர்ஷிதா (16), விடுமுறைதினம் என்பதால் தோழிகள் 3 பேருடன் காவிரி ஆற்றில் குளித்தபோது நீர்வரத்து அதிகரித்ததால் 4 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். தீயணைப்புத் துறையினர் மற்றும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து 3 மாணவிகளை பத்திரமாக மீட்டனர். இருப்பினும் நீரில் மூழ்கிய மாணவி ஹர்ஷிதா நீண்டநேர தேடுதலுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார்.
Similar News
News October 23, 2025
திருச்சி: பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்

சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் பத்திர பதிவு நடைபெறும் என்ற அடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களில் நாளை (அக்.24) கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி வழக்கமாக 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில் 150 டோக்கன்கள், 200 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில் 300 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.
News October 23, 2025
திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கான அறிவிப்பு

தமிழகத்தில் நெல் சாகுபடியில் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிகளுக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில் முதலிடம் பெரும் விவசாயிக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். இதில் பங்கேற்க விரும்பும் திருச்சி மாவட்ட விவசாயிகள், அருகில் உள்ள வட்டார வேளாண் உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வசந்தா தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
திருச்சி: ரயில் சேவையில் மாற்றம்

திருச்சி, மணப்பாறைம் வையம்பட்டி வழியாக இயக்கப்படும் செங்கோட்டை விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரயில் வரும் 24, 25, 26, 27, 28, 30, 31 ஆகிய தேதிகளில் வழக்கமான வழித்தடமான வையம்பட்டி, மணப்பாறை ரயில் நிலையங்களை தவிர்த்து காரைக்குடி, திருச்சி சந்திப்பு வழியாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.