News October 23, 2025
நெல்லை: மழைக்காலத்தில் இந்த App பயன்படுத்துங்க

நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மழை குறித்து விபரங்களை அறிந்து கொள்ள “டி என் அலர்ட்” என்ற செயலியை பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த செயலியில் மழை மற்றும் வானிலை குறித்து 4 நாட்களுக்கு முன்னதாகவே தகவல்கள் வெளியாகும். பேரிடர் காரணமாக புகார்களை பதிவு செய்யவும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இது உதவும்.
Similar News
News October 23, 2025
நெல்லை: 10th முடித்தால் கிராம ஊராட்சியில் வேலை., APPLY NOW

நெல்லை மக்களே, தமிழ்நாடு அரசின் கிராம ஊராட்சி செயலர் பணியிடங்களுக்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுக்க 1,483 காலியிடங்கள் உள்ளது. <
News October 23, 2025
மாவட்டக் கலைப் போட்டி தேதிகள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் வட்டார அளவில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கலைத் திருவிழா போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலான கலை திருவிழா போட்டிகள் வருகிற 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். காலை மற்றும் பிற்பகல் 2 பிரிவாக போட்டிகள் நடைபெறும்.
News October 23, 2025
நெல்லை: டூவிலர் மோதி தொழிலாளி உயிரிழப்பு

பாலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். தனது மனைவியுடன் புலவன் குடியிருப்பில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அவர் தனது நண்பருடன் இடையன்குளம் பகுதியில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக பத்தமடை வடிவேல் என்பவர் ஒட்டி வந்த பைக் மோதியதில் சிவகுமார் படுகாயம் அடைந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து களக்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.