News October 23, 2025
ரயில்வேயில் 2,570 பணிகள்: ₹38,400 வரை சம்பளம்

ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் 2,570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்ஜினியரிங் (அ) டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் வயது 18-ல் இருந்து 33-க்குள் இருந்தால் வரும் அக்.31 – நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹29,300 – ₹38,400 வரை கிடைக்கும். இதுதொடர்பான முழுவிபரங்கள் அறிய <
Similar News
News October 23, 2025
DMK ஆட்சியில் அனைவருக்கும் கண்ணீர் பரிசு: RB உதயகுமார்

சிறுவர்கள் பட்டங்களை பறக்கவிடுவது போல CM ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டதாக RB உதயகுமார் சாடியுள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், தற்போதைய ஆட்சியில், அரசு ஊழியர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவருக்கும் கண்ணீர் மட்டுமே பரிசாக கிடைத்துள்ளதாகவும் விமர்சித்துள்ளார். புதிய DGP முதல் மதுரை மேயர் வரை யாரையும் தேர்வு செய்ய முடியாமல் தவிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
News October 23, 2025
BREAKING: உருவாகிறது புதிய புயல் சின்னம்.. வந்தது அலர்ட்

அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பிருப்பதாக IMD தெரிவித்துள்ளது. அடுத்த 48 – 72 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நல்வாய்ப்பாக புயலாக மாறாமல் கரையை கடந்த நிலையில், தற்போது புதிதாக புயல் சின்னம் ஒன்று உருவாகியுள்ளது.
News October 23, 2025
இப்படி ஒரு பீர் பாட்டிலை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க

பிரபல கார்ல்ஸ்பெர்க் மதுபான நிறுவனம், உலகின் மிகச்சிறிய பீர் பாட்டிலை தயாரித்துள்ளது. வெறும் 12 மி.மீ. உயரமுள்ள இந்த பாட்டிலில் 1 துளி ஆல்கஹால் அல்லாத பீர் மட்டுமே இருக்கிறதாம். பொறுப்புடனும், குறைந்த அளவில் மது குடிப்பது குறித்து மக்களுக்கு அறிவுறுத்த, இதனை உருவாக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இத பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க?