News October 23, 2025
மாத்திரைகள் ஏன் கலர்கலராக உள்ளன?

நவீன யுகத்தில் பலரின் வாழ்க்கை மாத்திரியால்தான் இயங்கிக் கொண்டிருக்கு. அப்படி இருக்கையில் மாத்திரைகள் ஏன் பல கலர்களில் இருக்கு என யோசித்ததுண்டா? ஒரு முக்கிய காரணம், படிக்காதவர்கள் கூட நிறத்தை வைத்து சரியான மத்திரையை நேரத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும். மேலும், குறைவான வீரியமுள்ள மருந்துகள் பளிச் என்ற நிறத்திலும், வீரியமுள்ள மருந்துகள் அடர்த்தியான நிறத்தில் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
Similar News
News October 23, 2025
திமுக எம்எல்ஏ காலமானார்.. CM ஸ்டாலின் இரங்கல்

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் திமுக <<18078637>>MLA பொன்னுசாமியின்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இருமுறை MLA-வாக தேர்வாகி பழங்குடியின மக்கள் மற்றும் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டவரின் இழப்பு திமுகவுக்கு பேரிழப்பு என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், MLA பொன்னுசாமியை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தொகுதி மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
News October 23, 2025
பெரும் உயர்வைக் கண்ட இந்திய பங்குச்சந்தைகள்!

இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் உயர்வுடன் இன்றைய வர்த்தகத்தைத் தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 738 புள்ளிகள் உயர்ந்து 85,165 புள்ளிகளிலும், நிஃப்டி 206 புள்ளிகள் உயர்ந்து 26,074 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. கடந்தாண்டு செப்டம்பரில் சென்செக்ஸ் 85,978 புள்ளிகள் தொட்டதே புதிய உச்சமாக இருந்த நிலையில், மீண்டும் புதிய உச்சத்தை நோக்கி செல்வதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News October 23, 2025
RECIPE: உடலை வலுவாக்கும் பாசிப்பயறு கஞ்சி!

◆முடி, தோல் வளர்ச்சிக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் இந்த கஞ்சி உதவும் ➥பாசிப்பயறு, வேர்க்கடலை, கொண்டைக்கடலை, நட்ஸ் வகைகளுடன், சிறுதானியங்களை சேர்த்து சத்து மாவாக அரைத்து கொள்ளுங்கள் ➥தானியங்கள் குறைவாகவும், பயறு வகைகள் அதிகமாகவும் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள் ➥2 ஸ்பூன் அளவு மாவை எடுத்து, நன்கு கரைத்து உப்பு சேர்த்து, கஞ்சியாக்கி குடித்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். SHARE.