News October 23, 2025

WWC: இங்கிலாந்தை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா

image

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WWC லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 244 ரன்களை எடுத்தது. டாமி பியூமண்ட் 78 ரன்கள் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும், மற்ற வீராங்கனைகள் சொதப்பியதால் இங்கி., பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு அன்னபெல்(98), ஆஷ்லீ கார்ட்னர் (104) ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். 40.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5-வது வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்தது.

Similar News

News October 23, 2025

BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்

image

ஐஜேகே, NDA கூட்டணியில் தொடர்வதாக அக்கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் உறுதி செய்தார். சென்னையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், குறைந்தபட்சம் 5 தொகுதியில் போட்டியிட உள்ளதாக கூறினார். குறிப்பாக லால்குடி, குன்னம், திருவாடனை, கள்ளக்குறிச்சி மற்றும் சென்னையில் ஒரு தொகுதியில் களமிறங்க உள்ளதாக தெரிவித்தார். முன்னதாக TVK கூட்டணியில் IJK இணைய உள்ளதாக பேசப்பட்டது.

News October 23, 2025

இஷான் கிஷனுக்கு எகிறும் மவுசு!

image

2025 சீசனில் SRH அணிக்காக விளையாடிய இஷான் கிஷனுக்கு 2026 ஏலத்தில் மவுசு கூடி வருகிறது. 2025 தொடருக்கு முன்பாக, ₹11.25 கோடிக்கு SRH அணியால் வாங்கப்பட்ட இஷான் கிஷன், அந்த சீசனின் 2 சதங்களை விளாசினார். தற்போது அவரை அணியில் சேர்க்க KKR, MI, RR ஆகிய அணிகள் SRH அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அவரை விடுவிக்கும் முடிவை இன்னும் SRH எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News October 23, 2025

நல்லா தூங்கினாலும், சோர்வாகவே இருக்கா?

image

இரவில் நன்றாக தூங்கினாலும், காலையில் சோர்வாகவே இருக்கீங்களா? இதனை சாதாரணமாக எடுக்க வேண்டாம். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. மன அழுத்தம், தைராய்டு பிரச்னை, மதுபழக்கம், இரும்பு சத்து குறைபாடு, தூங்கும் மெத்தை சரியில்லாமல் இருப்பது இதற்கான காரணமாக இருக்கலாம் என டாக்டர்கள் சொல்றாங்க. இதை சரி செய்யவில்லை என்றால் நாளடைவில் இதய பிரச்னைகள் வரலாம். உடனே டாக்டரை அணுகுங்கள். SHARE.

error: Content is protected !!