News October 23, 2025
புதுச்சேரி: கடந்தாண்டை விட 45% மாசு குறைவு

தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்ட நிலையில், மாசு கட்டுப்பாட்டு குழுமம் பதிவு செய்த காற்று மாசுபாடு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், புதுச்சேரியில் தீபாவளி பண்டிகை மாசு, கடந்தாண்டை விட 45 சதவீதம் குறைந்ததுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. தீபாவளியின் போது உருவாகும் காற்று மற்றும் ஒலி மாசுவை அளவீடு செய்ய சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 23, 2025
புதுச்சேரியில் தீபாவளி மதுபான விற்பனை சரிவு

புதுவையில் ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு மது விற்பனை அதிகளவில் நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை 5 முதல் 10 சதவீதம் வரை குறைந்துள்ளதாக மதுபான விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு கடந்த 3 மாதம் முன்பு அரசின் வருவாயை உயர்த்த மதுபானங்களின் வரியை உயர்த்தியதே காரணம் என கூறப்படுகிறது.
News October 23, 2025
புதுச்சேரி: அனைத்து துறைகளின் கட்டுப்பாட்டு எண்கள் அறிவிப்பு

புதுச்சேரியில் கனமழை காரணமாக புதுச்சேரி மாவட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, அனைத்து துறைகளின் அறை எண்களை அறிவித்துள்ளது. மக்கள் அனைவரும் அவற்றை பின்பற்றி தங்கள் இருப்பிட பகுதிகளில் மழையினால் ஏற்படும் பிரச்சினைகளை அதில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு (கட்டணமில்லா தொலைபேசி எண்கள்) தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News October 22, 2025
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

வீடுர் அணையில் இருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் புதுச்சேரி சக்கரா பரணி ஆற்றங்கரையில் வசிக்கும் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், பொதுமக்கள் பேரிடர் தொடர்பான தங்களது புகார்களுக்கு 1077, 1070, 112 அல்லது 9488981070 என்ற இலவச எண்ணை தொடர்புகொண்டு தெரிவிக்காலம் எனவும் கூறியுள்ளார்.


