News October 23, 2025

தீபாவளியன்று விதிகளை மீறியதாக 275 பேர் மீது வழக்கு

image

விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் தீபாவளி தினத்தன்று மாவட்ட காவல்துறை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தீபாவளி அன்று மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 85 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் மது அருந்தியதாக 190 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

Similar News

News October 23, 2025

விருதுநகரில் ஒரே நாளில் 275 பேர் மீது வழக்கு

image

விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் தீபாவளி தினத்தன்று மாவட்ட காவல்துறை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது தீபாவளி அன்று மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 85 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் பொது இடங்களில் மது அருந்தியதாக 190 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

News October 23, 2025

சிவகாசியில் கந்தசஷ்டி திருக்கல்யாண விழா

image

சிவகாசி அருகே திருத்தங்கல் அருள்மிகு மீனாட்சி அம்பிகை சமேத அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், அருள்மிகு பழனியாண்டவர் சன்னதி கந்தசஷ்டி திருக்கல்யாண விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான கந்த சஷ்டி திருக்கல்யாண விழா 31.10.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 7.45 மணியிலிருந்து 8.45 மணிக்குள் நடைபெற உள்ளது.

News October 22, 2025

பயிர்காப்பீடு செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்

image

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 – ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 2025-26 ராபிபருவத்தில், வேளாண் பயிர்களுக்கு உரிய காப்பீடு கட்டணம் செலுத்தி உடனடியாக பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!