News October 23, 2025

மயிலாடுதுறை: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவலர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. சீர்காழி, திருவெண்காடு, குத்தாலம், செம்பனார்கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று இரவு ரோந்து பணியில் உள்ள காவலர்களின் நேரடி தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.

Similar News

News October 23, 2025

மயிலாடுதுறை: பொறையார் அருகே முதியவர் கொலை

image

பொறையார் காவல் சரகம் ஆனைகோயில் பகுதியைச் சேர்ந்த அமிர்தலிங்கம்(65) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராஜமூர்த்தி(22) என்பவருக்கும் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் ராஜமூர்த்தி கத்தியால் அமிர்தலிங்கத்தை நெஞ்சில் தாக்கிய நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பொறையார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

News October 22, 2025

மயிலாடுதுறையில் அமைச்சர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம்

image

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொய்வின்றி நெல் கொள்முதல் செய்யும் பணிக்காக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் சக்கரபாணி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைகள் மேற்கொண்டனர்.

News October 22, 2025

மயிலாடுதுறை: 10th பாஸ் போதும்… வேலை ரெடி!

image

ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் காலியாக உள்ள 2623 அப்ரண்டிஸ்ஷிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாயுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. கல்வித் தகுதி: 10th, 12th, ITI, Diploma, Degree, B.E/B.Tech
3. கடைசி தேதி : 06.11.2025
4. சம்பளம்: ரூ.8,200 – 12,300
5. வயது வரம்பு: 18 – 24 (SC/ST – 29, OBC – 27)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> [CLICK HERE]<<>>
அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்க*

error: Content is protected !!