News October 23, 2025
அந்த வலியை பாக்., எப்போதும் மறக்காது: ராஜ்நாத் சிங்

தற்போது போர்கள் பல்வேறு புதிய பரிணாமங்களை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அதனால், பாரம்பரிய பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது வேலைக்கு ஆகாது எனவும், அதனால் தான் முப்படைகளுக்கும் தலைமை தளபதி உள்ளிட்ட பல்வேறு முன் முயற்சிகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் ஏற்படுத்திய வலியை பாகிஸ்தான் எப்போதும் மறக்காது என்றும் கூறியுள்ளார்.
Similar News
News October 23, 2025
விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்: ராமதாஸ்

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் கனமழையால் விவசாயிகளின் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளையும், வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களையும் கணக்கு எடுத்து உரிய நிவாரணங்களை உடனடியாக தமிழக அரசு வழங்க அவர் வலியுறுத்தியுள்ளார். கொள்முதல் நிலையங்களின் மெத்தன போக்கால் விவசாயிகள் பாதிப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
News October 23, 2025
ரயில்வேயில் 2,570 பணிகள்: ₹38,400 வரை சம்பளம்

ரயில்வேயில் ஜூனியர் இன்ஜினியர் 2,570 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இன்ஜினியரிங் (அ) டிப்ளமோ முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். உங்கள் வயது 18-ல் இருந்து 33-க்குள் இருந்தால் வரும் அக்.31 – நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ₹29,300 – ₹38,400 வரை கிடைக்கும். இதுதொடர்பான முழுவிபரங்கள் அறிய <
News October 23, 2025
நெஞ்சு சளியை வெளியேற்றும் கசாயம் இதோ!

நுரையீரலில் தேங்கியுள்ள சளியை கரைத்து வெளியேற்ற இந்த கசாயம் போதும். முதலில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் சுட வைக்க வேண்டும். அதில் கிராம்பு, மிளகு, ப்ளாக் சால்ட், சுக்கு பவுடர், ஓமம், வெல்லத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து, பாதியாக சுண்டியதும், அதை இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இதனால் நெஞ்சு சளி, மூக்கடைப்பு, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.