News October 22, 2025
புதிய டிஜிபி நியமனம்: EPS-க்கு அமைச்சர் பதிலடி

புதிய டிஜிபி நியமனம் தொடர்பாக விமர்சித்த EPS-க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் அடாவடித்தனத்தாலே புதிய டிஜிபி நியமனத்தில் தாமதம் ஏற்படுவதாகவும், எத்தனையோ ஆண்டுகள் டிஜிபி இல்லாமல் அதிமுக ஆட்சி நடத்தியதை மறந்து EPS பேசுவதாகவும் அவர் சாடியுள்ளார். முன்னதாக, திமுக அரசுக்கு நெருக்கமானவர்களை டிஜிபியாக நியமிக்கவே தாமதப்படுத்துவதாக அவர் விமர்சித்து இருந்தார்.
Similar News
News October 23, 2025
நெஞ்சு சளியை வெளியேற்றும் கசாயம் இதோ!

நுரையீரலில் தேங்கியுள்ள சளியை கரைத்து வெளியேற்ற இந்த கசாயம் போதும். முதலில் ஒரு டம்ளர் நீரை ஊற்றி அடுப்பில் சுட வைக்க வேண்டும். அதில் கிராம்பு, மிளகு, ப்ளாக் சால்ட், சுக்கு பவுடர், ஓமம், வெல்லத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். கொதித்து, பாதியாக சுண்டியதும், அதை இறக்கி வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இதனால் நெஞ்சு சளி, மூக்கடைப்பு, இருமலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
News October 23, 2025
மின்சார கார்களின் விற்பனை அமோகம்

கடந்த ஆண்டு செப்டம்பரை ஒப்பிடும்போது நடப்பாண்டு மின்சார கார்களின் மொத்த விற்பனை 6,216-ல் இருந்து 15,329-ஆக அதிகரித்துள்ளன. டாடா மோட்டார்ஸ் கார்களின் விற்பனை 62% அதிகரித்து 6,216 கார்கள் விற்றுள்ளன. அதேபோல் JSW MG MOTORS 3,912, மஹிந்திரா நிறுவனம் 3,243, BYD இந்தியா 547, கியா இந்தியா 506, ஹிண்டாய் மோட்டார் 349, BMW இந்தியா 310, பென்ஸ் இந்தியா 97 கார்களையும் விற்பனை செய்துள்ளன.
News October 23, 2025
வரலாற்றில் இன்று

1989 – பாடகி ஜொனிதா காந்தி பிறந்தநாள்
2001 – காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை முயற்சியை முறியடித்த ராணுவம்
2002 – மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்
2011 – துருக்கியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 582 பேர் பலி
2023 – முன்னாள் கிரிக்கெட் வீரர் பிசன் சிங் பேடியின் நினைவு நாள்