News October 22, 2025
அபுதாபி T10 சீசனில் களமிறங்கும் சீனியர் வீரர்கள்

அபுதாபியில் வரும் நவ.18-ம் தேதி தொடங்க உள்ள T10 சீசனில், 4 இந்திய சீனியர் வீரர்கள் விளையாட ஒப்பந்தமாகியுள்ளனர். Aspin Stallions அணியில் ஹர்பஜன் சிங், Ajman Titans அணியில் பியூஷ் சாவ்லா, Vista Riders அணியில் ஸ்ரீசாந்த் விளையாட உள்ளனர். 8 அணிகள் மோதும் இந்த தொடரில் டு பிளசிஸ், ரஸல், ஹெட்மயர், நிக்கோலஸ் பூரன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளிட்ட பல சர்வதேச வீரர்களும் விளையாட உள்ளனர்.
Similar News
News October 23, 2025
வரலாற்றில் இன்று

1989 – பாடகி ஜொனிதா காந்தி பிறந்தநாள்
2001 – காஷ்மீர் விமானத் தளத்தைப் தகர்க்கும் தீவிரவாதிகளின் தற்கொலைப் படை முயற்சியை முறியடித்த ராணுவம்
2002 – மாஸ்கோவில் நாடக அரங்கு ஒன்றில் தீவிரவாதிகளினால் 700 பேர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர்
2011 – துருக்கியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 582 பேர் பலி
2023 – முன்னாள் கிரிக்கெட் வீரர் பிசன் சிங் பேடியின் நினைவு நாள்
News October 23, 2025
மாத்திரைகள் ஏன் கலர்கலராக உள்ளன?

நவீன யுகத்தில் பலரின் வாழ்க்கை மாத்திரியால்தான் இயங்கிக் கொண்டிருக்கு. அப்படி இருக்கையில் மாத்திரைகள் ஏன் பல கலர்களில் இருக்கு என யோசித்ததுண்டா? ஒரு முக்கிய காரணம், படிக்காதவர்கள் கூட நிறத்தை வைத்து சரியான மத்திரையை நேரத்துக்கு எடுத்துக்கொள்ள முடியும். மேலும், குறைவான வீரியமுள்ள மருந்துகள் பளிச் என்ற நிறத்திலும், வீரியமுள்ள மருந்துகள் அடர்த்தியான நிறத்தில் இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
News October 23, 2025
அதிமுக ஆட்சியில் ₹2,000 கோடி ஒப்பந்த பணிகளில் முறைகேடு

EPS-ன் நெருங்கிய நண்பர்கள், Ex. அமைச்சர் SP.வேலுமணி தொடர்பான நிறுவனம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சியில் ₹2,000 கோடி சாலை ஒப்பந்த பணிகளை, விதிகளை மீறி பெற்று அரசுக்கு ₹20 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ADMK ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சியில் நடந்த ஒப்பந்த முறைகேடு தொடர்பாக DVAC விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.