News October 22, 2025
BREAKING: விஜய்க்கு அதிர்ச்சி

கரூர் துயர சம்பவத்திற்கு பின், விஜய் X-ல் 1 பதிவு, 1 வீடியோ, 1 அறிக்கை மட்டுமே வெளியிட்டார். நிவாரணத் தொகை கூட வங்கி கணக்கிலேயே செலுத்தப்பட்டது. அவரது இந்த அமைதியான நிலைப்பாடு, தவெக நிர்வாகிகளை அதிருப்தியடைய செய்திருக்கிறதாம். இது 2-ம் கட்ட தலைவர்கள் மூலம் விஜய் காதுக்கு சென்றதால் அதிர்ச்சியடைந்த அவர், கட்சிப் பணிகளில் மீண்டும் வேகம் காட்ட முடிவெடுத்துள்ளார். சீக்கிரம் களத்துக்கு வருவாரா விஜய்?
Similar News
News October 23, 2025
CSK-வில் அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர்

IPL-ல் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க CSK திட்டமிட்டுள்ளது. குஜராத் அணியும் ₹3.2 கோடிக்கு சுந்தரை டிரேட் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை சரியாக குஜராத்தால் பயன்படுத்த முடியவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுந்தர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் CSK-வுக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 497
▶குறள்:
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
▶பொருள்:ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.
News October 23, 2025
SPORTS ROUNDUP: ஜப்பான் ஓபன் காலிறுதியில் கரோலினா

*புரோ கபடி லீக்: நடப்பு தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது
*பிரான்ஸ் ஓபன்: இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி முதல் சுற்றில் ஜப்பான் வீரரிடம் தோல்வி
*ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கரோலினா முசோவா
*தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: 3ம் நாள் முடிவில் 23 ரன் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் *பிரான்ஸ் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாத்விக் -சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி