News October 22, 2025
BREAKING: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

தருமபுரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. காலை முதல் கனமழை பெய்து வருவதால் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவ.15(சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களிலும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றன.
Similar News
News October 23, 2025
CSK-வில் அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர்

IPL-ல் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க CSK திட்டமிட்டுள்ளது. குஜராத் அணியும் ₹3.2 கோடிக்கு சுந்தரை டிரேட் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை சரியாக குஜராத்தால் பயன்படுத்த முடியவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுந்தர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் CSK-வுக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 497
▶குறள்:
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
▶பொருள்:ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.
News October 23, 2025
SPORTS ROUNDUP: ஜப்பான் ஓபன் காலிறுதியில் கரோலினா

*புரோ கபடி லீக்: நடப்பு தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் அணியாக வெளியேறியது
*பிரான்ஸ் ஓபன்: இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி முதல் சுற்றில் ஜப்பான் வீரரிடம் தோல்வி
*ஜப்பான் ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முன்னேறினார் கரோலினா முசோவா
*தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: 3ம் நாள் முடிவில் 23 ரன் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் *பிரான்ஸ் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாத்விக் -சிராக் ஜோடி அதிர்ச்சி தோல்வி