News October 22, 2025
நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ஆம் தேதி தொடங்கி தீவிரமாக உள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக பல இடங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சில பகுதிகளில் ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட் விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வானிலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Similar News
News January 26, 2026
கோத்தகிரி அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

கோத்தகிரியை சேர்ந்த சமூக சேவகரான தொழிலதிபர் சிவகுமார்(வயது 48). இந்நிலையில் நேற்று மேட்டுப்பாளையம் நாலு ரோடு பகுதியில் நடைபெற்ற, கட்சி நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் பங்கேற்று விட்டு, தனது காரில் திரும்ப செல்லும் போது, இயற்கை உபாதையை கழிக்க காரை நிறுத்தி இறங்கியுள்ளார். அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 26, 2026
உதகையில் அதிரடி கைது!

ஊட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி போலீசார் ஊட்டி பெர்ன்ஹில் பேலஸ் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 35 மூட்டைகளில் 1.5டன் ரேஷன் அரிசி கடத்தப்பட்டது தெரிந்தது. பின்னர் அவற்றை பறிமுதல் செய்த போலீசார், ஓட்டுநரை கைது செய்தனர்.
News January 25, 2026
நீலகிரி: Certificate இல்லையா? உடனே இத பண்ணுங்க!

நீலகிரி மக்களே, உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. <


