News October 22, 2025

அடுத்த மாநாட்டை அறிவித்தார் சீமான்

image

திருச்சியில் வரும் 2026 பிப்ரவரி 7-ம் தேதி ‘மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாட்டை’ நடத்த போவதாக சீமான் அறிவித்துள்ளார். நம் இனத்தின் திருவிழா என்பதால், அனைவரும் கூடுவோம் என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுவரை ‘மரங்களின் மாநாடு’, ‘மலைகளின் மாநாடு’, ‘ஆடு மாடுகளின் மாநாடு’ ஆகியவற்றை நடத்தியுள்ள அவர், வரும் நவம்பர் 15-ம் தேதி ‘தண்ணீர் மாநாட்டையும்’ நடத்த உள்ளார்.

Similar News

News October 24, 2025

என் சாவுக்கு இவரே காரணம்.. பெண்ணின் கடைசி நிமிடம்

image

மகாராஷ்டிராவில் அரசு பெண் டாக்டர் ஒருவர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கு SI கோபால்தான் காரணம் என அந்த பெண் தனது கையில் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ளார். கோபால் பல முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து, 3 மாதங்களுக்கு முன்பே டிஜிபியிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லாததால் தற்கொலை செய்துள்ளார்.

News October 24, 2025

இந்திய எல்லையில் ஏவுகணை தளம் அமைக்கும் சீனா

image

திபெத்தில் உள்ள பாங்காங் ஆற்றுப்படுகையில் சீனா சத்தமே இல்லாமல், வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கி வருகிறது. வெடிமருந்து குடோன், கட்டளை, கட்டுப்பாடு மையங்கள், ஏவுகணை ஏவுதள கட்டுமானங்களை நிறுவி வருவது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த பகுதி இந்திய எல்லையில் இருந்து 110 கிமீ தொலைவில் உள்ளது. 2020-ல் எல்லை மோதல்கள் நடந்த இடங்களில் இப்பகுதியும் ஒன்றாகும்.

News October 24, 2025

சுய பராமரிப்பு டிப்ஸ்

image

வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உடல்நலம் மற்றும் மனநலம் இரண்டும் மிகவும் அவசியம். இதற்கு, ஏராளமான சுய பராமரிப்பு பழக்கங்கள் உள்ளன. சிறிய பயிற்சி கூட தினசரி செய்தால், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவை என்ன பயிற்சிகள் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில், நீங்கள் செய்ய விரும்பும் பயிற்சி எது? கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!