News October 22, 2025

கருணை அடிப்படையில் அரசு வேலை: இவர்களும் கோரலாம்!

image

நேரடி வாரிசுகள் தவிர கருணை அடிப்படையில் அரசு வேலைபெற இவர்களும் தகுதியானவர்கள்: *திருமணமான மகள், மருமகன் ஆகியோர் பெண்ணின் பெற்றோரை சார்ந்து வாழ்ந்து வந்தார்கள் என்பதை நிரூபித்தால் பணி நியமனம் உண்டு. *பணிக்கு செல்ல முடியாத நிலையில் திருமணமான மகள் இருந்தால், மருமகனுக்கு வேலை வழங்கப்படும். *திருமணமாகாத ஊழியர், விவாகரத்தானவர், கணவனை இழந்தவர் ஆகியோரின் பெற்றோர் (அ) சகோதர சகோதரிக்கும் பணி வழங்கப்படும்.

Similar News

News October 23, 2025

இதை செய்யுங்க… உங்க இதயம் நல்லா இருக்கும்!

image

தொடர்ந்து 40 புஷ்-அப் செய்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் ஆபத்து மிகக் குறைவு என டாக்டர்கள் கூறுகின்றனர். புஷ்-அப் போன்ற ஏரோபிக் உடற்பயிற்சிகளுக்கும் இதய ஆரோக்கியத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டாம். 1,000 ஆண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 40-க்கு மேல் புஷ்-அப்கள் செய்யும் திறன் கொண்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் ஆபத்து ஒப்பீட்டளவில் 96% குறைவதாக தெரிய வந்துள்ளது. நீங்களும் ட்ரை பண்ணலாமே?

News October 23, 2025

அந்த வலியை பாக்., எப்போதும் மறக்காது: ராஜ்நாத் சிங்

image

தற்போது போர்கள் பல்வேறு புதிய பரிணாமங்களை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அதனால், பாரம்பரிய பாதுகாப்பு நடைமுறைகள் தற்போது வேலைக்கு ஆகாது எனவும், அதனால் தான் முப்படைகளுக்கும் தலைமை தளபதி உள்ளிட்ட பல்வேறு முன் முயற்சிகளை அரசு எடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஆபரேஷன் சிந்தூர் ஏற்படுத்திய வலியை பாகிஸ்தான் எப்போதும் மறக்காது என்றும் கூறியுள்ளார்.

News October 23, 2025

ராசி பலன்கள் (23.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!