News October 22, 2025
சூப்பர் மாரி.. வாழ்த்திய ரஜினிகாந்த்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடித்து தீபாவளிக்கு வெளியான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், மாரி செல்வராஜுக்கு போன் செய்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ‘படத்துக்கு படம் உங்கள் உழைப்பும் உங்கள் ஆளுமையும் என்னை ஆச்சரியப்படுத்துகிறது’ என்று ரஜினி கூறியதாக மாரி, தனது X பக்கத்தில் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.
Similar News
News March 23, 2026
FLASH: வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சசிகலா!

புதுச்சேரியில் இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், சசிகலாவின் அஇபுதமமுக சார்பில் 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. நெட்டப்பாக்கம்(தனி) – சிலம்பரசன், வில்லியனூர் – நந்தகோபால், உழவர்கரை – லாவண்யா, இந்திரா நகர் – ஜெயபால் (எ) செங்கேணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். புதுச்சேரியில் ராமதாஸ் தரப்பு 10 தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News March 23, 2026
கூட்டணியில் இல்லையா? அதிமுக அதிர்ச்சி

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சியை இணைக்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருப்பதாகவும், எந்தக் கட்சியுடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம் எனத் தனது முடிவைக் கூறி அதிமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும், தனித்து போட்டியில்லை எனக் கூறிய அவர், 100 தொகுதிகளில் போட்டியிடுவதற்கு தன்னிடம் வேட்பாளர்கள் தயாராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
News March 23, 2026
போரால் அமெரிக்காவுக்கு ₹7,500 கோடி இழப்பு

மேற்கு ஆசியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் அமெரிக்காவிற்கு சுமார் ₹7,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக BBC மற்றும் CSIS அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. போர் தொடங்கிய முதல் 2 வாரங்களிலேயே ₹75 கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஜோர்டானில் உள்ள THAAD ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டதில் மட்டும் ₹4,000 கோடிக்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதாம்.


