News October 22, 2025
குமரி அணைகளில் இன்றைய நீர் இருப்பு விபரம்

குமரியில் பாசனத்திற்கு பயன்படும் அணைகளின் இன்றைய (அக். 22) நீர்மட்ட விவரம்; பேச்சிப்பாறை அணை – 41.74அடி (மொத்தம் 48 அடி), பெருஞ்சாணி அணை – 64.55 அடி (77 அடி), சிற்றாறு 1 அணை – 6.99 அடி (18 அடி), சிற்றாறு 2 அணையில் 7.08 அடி (18 அடி) நீர் உள்ளது. மேலும் பேச்சிப்பாறைக்கு 546 கனஅடி, பெருஞ்சாணிக்கு 511 கன அடி நீர்வரத்தும் உள்ளது.
Similar News
News October 22, 2025
உழவரைத் தேடி வேளாண்மை முகாம் அறிவிப்பு

உழவரை தேடி வேளாண்மை முகாம்கள் ஒவ்வொரு வட்டாரத்திலும் மாதம் தோறும் 4 வருவாய் கிராமங்களில் நடத்தப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 24.10.2025 அன்று செண்பகராமன்புதுார், வெள்ளிசந்தை. ஆற்றூர் ஆகிய 3 கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் தலைமையிலும், குமாரபுரம், சைமன் காலனி ஆகிய 2 கிராமங்களில் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையிலும் நடைமுறை இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
குமரி : 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
News October 22, 2025
குமரி: கடன் கேட்டு போராட்டம் நடத்திய வாலிபர்

குமரி, கிராத்தூர் பகுதி பட்டதாரி சுஜின்(35) கிராத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ரூ.10,000 கடன் கேட்டுள்ளார். அங்கிருந்த செயலாளர் சுஜினின் உறுப்பினர் சேர்க்கை அங்கீகரிகபடவில்லை எனக்கூறி திருப்பி அனுப்பினார். இதனால் சுஜின் நேற்று (அக்.21) கூட்டுறவு அலுவலகம் முன்பு பதாகையுடன் கடன் கேட்டு போராட்டம் நடத்தினார். நித்திரவிளை போலீசார் சுஜினை காரில் போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று எச்சரித்தனர்.