News October 22, 2025
BREAKING: இன்றும் ரெட் அலர்ட்.. கனமழை பொளந்து கட்டும்

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நாளை(அக்.23) கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. அதுமட்டுமின்றி, அக்.28-ம் தேதி வரை தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 9, 2026
₹30 போதும்.. ஆண்டு முழுவதும் இலவச சிகிச்சை

வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்கள் இலவச சிகிச்சை பெற ஆண்டுக்கு ₹30,000 வரை ‘ராஷ்ட்ரிய ஸ்வஸ்த்ய பீமா யோஜனா திட்டம்’ காப்பீடு வழங்குகிறது. இதில் குடும்பத்தினர் 5 பேர் மட்டுமே பலனடைய முடியும். பதிவு (அ) புதுப்பித்தல் கட்டணமாக ₹30 மட்டும் செலுத்தி சேரலாம். அறுவை சிகிச்சை, மருத்துவ செலவு, மகப்பேறு, Pre-existing diseases என அனைத்துக்கும் காப்பீடு கிடைக்கும். இ-சேவை மையத்தை அணுகுங்கள். SHARE.
News April 9, 2026
அதிமுக வேட்பாளர் மயக்கம்.. ஹாஸ்பிடலில் அனுமதி!

திருவிடைமருதூர் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் திடீரென மயங்கி விழுந்ததால் ஆடுதுறையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வண்ணக்குடி பகுதியில் பிரசாரம் செய்தபோது மயங்கி விழுந்த அவரை கட்சி நிர்வாகிகள் மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 9, 2026
தமிழ் நடிகை தற்கொலை.. பரபரப்பு தகவல்

சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. FIR-ல் உள்ள அவரது பெயருக்கும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும் முரண்பாடு உள்ளதாம். இச்சிக்கலை களைய, சுபாஷினியின் குடும்பத்தார் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.


