News October 22, 2025

புதுச்சேரி: சைபர் கிரைம் வெளியிட்ட தகவல்!

image

புதுச்சேரி சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 2023-2024 ஆம் ஆண்டுகளில், ஆன்லைனில் தீபாவளி பட்டாசு தள்ளுபடி மோசடி தொடர்பாக 50க்கும் மேற்பட்ட புகார்களைப் பெற்றோம். இந்த ஆண்டு அவ்வாறு மக்கள் ஏமாந்துவிட கூடாது என்பதற்காக முன்கூட்டியே விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இதனால் தீபாவளி பட்டாசு தள்ளுபடி விற்பனையில் ஏமாந்தவர்களின் புகார்கள் 2 பேரிடம் பெற்றோம் என்றார்.

Similar News

News October 25, 2025

புதுவை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

புதுவை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan என்ற இணையத்தில்<<>> உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT NOW.

News October 25, 2025

புதுவை: பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர்!

image

புதுவை வில்லியனூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்ற போது, கோபாலன் கடை பகுதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் கத்தியை காட்டி அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டுவதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று, அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் கோபாலன் கடை பகுதி அருண்குமார் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

News October 25, 2025

புதுவை: கணினி திறன் தேர்வு ஒத்திவைப்பு

image

புதுவை அரசின் தோ்வு அமைப்பின் உறுப்பினர் செயலர் ஜெய்சங்கா் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில், தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட கிராம நிா்வாக அதிகாரிக்கான கணினித் திறன் தோ்வு 26.10.2025 அன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தற்போது, நிா்வாகக் காரணங்களால் இந்தத் தோ்வு 02.11.2025 அன்று நடைபெறும்.” என்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!