News October 22, 2025
அமைச்சர் பேரவையிலும் பொய் சொல்கிறார்: EPS

தஞ்சை காட்டூரில் மட்டும் கொள்முதல் செய்யப்படாமல் 5,000 நெல் மூட்டைகள் சாலையில் கொட்டி, 20 நாள்களாக காத்திருப்பதாக EPS கூறியுள்ளார். ஆகஸ்ட்டிலேயே செறிவூட்டப்பட்ட அரிசியை கலக்க மத்திய அரசு அனுமதி அளித்தும், அனுமதி கிடைக்கவில்லை என அமைச்சர் (சக்கரபாணி) பேரவையிலும் பொய் சொல்வதாக குற்றஞ்சாட்டினார். நெல் கொள்முதலில் பழைய விலையே கொடுக்கப்படுவதால், விவசாயிகளுக்கு லாபம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News October 24, 2025
BREAKING: நாளை அனைத்து பள்ளிகளுக்கும்…

தமிழகத்தில் நாளை(சனிக்கிழமை) அனைத்து பள்ளிகளும் செயல்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அளித்ததை ஈடுசெய்ய நாளை பள்ளிகள் முழுநேரம் செயல்பட பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. செவ்வாய்க்கிழமை அட்டவணைப்படி வகுப்புகள் இயங்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படலாம். SHARE IT.
News October 24, 2025
மனிதனிடம் இந்த திறமைகள் அழிஞ்சிட்டு வருது!

தற்போது, டெக்னாலஜி இல்லாமல் எந்த ஒரு வேலையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு மனிதன் வந்துவிட்டான். சிறு வேலையாக இருந்தாலும், ஒருவருக்கு டெக்னாலஜியின் உதவி தேவைப்படுகிறது. ஆனால், இப்படியான உதவியால், மனிதனிடம் இருந்த பல திறமைகள் மெல்ல அழிந்து வருகின்றன. அவை என்னென்ன என தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. இன்னும் என்ன திறமையை எல்லாம் நாம் இழப்போம் என கமெண்ட் பண்ணுங்க?
News October 24, 2025
தங்கம் வாங்க இது சரியான நேரமா?

தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே போவதால், தற்போது தங்கம் வாங்குவது சரியான முதலீடா? இப்போது ஏறும் விலை திடீரென சரியுமா என பல சந்தேகங்கள் உள்ளன. ஆனால், இன்னும் 3 அல்லது 6 மாதங்களில் தங்கத்தின் விலை பெரிய உச்சத்தை அடையும் என நகை வியாபாரிகள் கூறுகின்றனர். அதனால், தற்போது கையில் காசு உள்ளவர்கள் பிக்சட் டெபாசிட்டுக்கு பதிலாக, தங்கத்தில் முதலீடு செய்யவும் அறிவுறுத்துகின்றனர்.


