News October 22, 2025
சென்னையில் மழை தொடரும்!

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. மேலும், சென்னையில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேவையின்றி வெளியே செல்லாமல் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News October 24, 2025
சென்னையில் நாளை பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

சென்னையில் நாளை (அக்.25) அனைத்து பள்ளிகளும் செவ்வாய்க்கிழமை அட்டவணைப் படி பணி நாளாக செயல்படும் என முதன்மை கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். தீபாவளிக்கு அக்.21 அன்று அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல் இயங்கும். *நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News October 24, 2025
சென்னை: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, சென்னை பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணான 9500190590-ஐ அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 24, 2025
சென்னை: மின் தடையா..? உடனே CALL!

சென்னை மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


