News October 22, 2025
JUST IN ராமநாதபுரம்: 5810 காலியிடங்கள் அறிவிப்பு

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
Similar News
News October 23, 2025
ராமேஸ்வரம்: அக்.25 ல் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை, பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் ராமேஸ்வரம் விவேகானந்தா மெட்ரிக். பள்ளியில் அக்.25 காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இதில் இருதயம், மகப்பேறு, மகளிர், நுரையீரல், நரம்பியல், குழந்தைகள் நலம், நீரிழிவு உள்பட பல்வேறு நோய் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
News October 22, 2025
மண்டபம் தென் கடலில் நாளை மீன்பிடிக்க தடை

இந்திய வானிலை மையம் எச்சரிக்கை படி மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி உருவாகியுள்ளதால் மண்டபம் தென் கடல் விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதிச்சீட்டு நாளை (அக்.23) வழங்கப்பட மாட்டாது. மறு உத்தரவு வரும் வரை நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
News October 22, 2025
இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று அக்.21 காலை 6 மணிமுதல் இன்று அக்.22 காலை 6 மணிவரை பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இராமநாதபுரம் 85 மில்லி மீட்டர், மண்டபம் 103.60 மில்லி மீட்டர், இராமேஸ்வரம் 85 மில்லி மீட்டர், பாம்பன் 63.20 மில்லி மீட்டர், தங்கச்சிமடம் 82.40 மில்லி மீட்டர், பல்லமோர்க்குளம் 16.50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.