News October 22, 2025
சேலம்: கட்டடத் தொழிலாளி தற்கொலை!

சேலம்: கோரிமேடு அருகே சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான சதீஷ்குமார்(22). இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். எனவே இவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 25, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
News October 25, 2025
சேலம்: வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை!

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் அனைத்து வகை மாற்றுத்திறனாளி இளைஞர்கள் வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் அல்லது இணையதளத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News October 24, 2025
சேலம்: தாட்கோ மூலம் இலவச பயிற்சி வகுப்புகள்!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது பயிற்சி சேர விருப்பம் உள்ளவர்கள் www.tahdco.comஇணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வலியுறுத்தியுள்ளார்.


