News October 22, 2025
10-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. மத்திய அரசு பணி

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள Border Roads Organisation-ல் காலியாகவுள்ள 542 மெக்கானிக் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன், அந்தந்த பதவிகளுக்கு ஏற்ப தொழிற்சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்: ₹20,200. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News February 7, 2026
நாமக்கல்: இனி Whatsapp மூலம் வரி செலுத்தலாம்!

தமிழக அரசு, மெட்டா நிறுவனத்துடன் இணைந்து Whatsapp மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழ்களை பெறுதல், வரி மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் என 50-க்கும் மேற்பட்ட சேவைகள் பெரும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அத்தனை அரசு சேவைகளையும் அலைச்சல் இல்லாமல் நீங்கள் வீட்டில் இருந்தே பெறலாம்! ஷேர் பண்ணுங்க.
News February 7, 2026
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்

செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை தொடர்ந்து மற்றொரு அதிமுக மூத்த நிர்வாகி தவெகவில் இணைந்துள்ளார். வட சென்னையை சேர்ந்த அதிமுக Ex MLA வி.எஸ்.பாபு விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், EPS-க்கு ஆளுமை இல்லை என தெரிவித்ததோடு, அதிமுகவின் செயல்பாடு தனக்கு பிடிக்கவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.
News February 7, 2026
துரோகம் செய்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி: கனிமொழி

யாரோடு இருந்தால் TN பாதுகாப்பாக இருக்கும் என்பது தெளிவாக தெரிவதால் பெண்களும் இளைஞர்களும் திமுகவை ஆதரிக்கிறார்கள் என கனிமொழி பேசியுள்ளார். விருதுநகரில் பேசிய அவர், இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தை பார்க்கும்போது ’வெற்றி நமது, வெற்றி நமது’ என சொல்ல தோன்றுகிறது என்றார். மேலும், TN-க்கு துரோகம் செய்த பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியுள்ளதாக அதிமுகவையும் விமர்சித்துள்ளார்.


