News October 22, 2025

கேரளாவின் முயற்சியை தமிழகம் முறியடிக்கணும்: TTV

image

முல்லைப் பெரியாறு அணையை இடித்தே தீருவோம் என்று கேரள அரசு பிடிவாதம் பிடிப்பதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவின் சில அமைப்புகளும் இதே மனப்பான்மையில் வதந்திகளை பரப்பி வருவதாகவும் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். எனவே, முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க, தமிழக அரசு சட்ட ரீதியாக முயற்சிகளை மேற்கொண்டு, கேரள அரசின் திட்டங்களை முறியடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News October 24, 2025

பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான புதிய அறிவிப்பு

image

RTE-ன் படி தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அக்.30 & 31 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக 81,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அக்.30-ல், விண்ணப்பங்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நடைபெறும். அக்.31-ல், விண்ணப்பங்கள் அதிகமாக உள்ள பள்ளிகளில், குலுக்கல் முறையில் (Random Selection) மாணவர் தேர்வு & சேர்க்கை நடத்தப்படவுள்ளது.

News October 24, 2025

தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் S.I.R.

image

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் S.I.R. தொடங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தியாகராய நகர் தொகுதி வாக்காளர் நீக்கம், சேர்ப்புக்கு எதிரான வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, தமிழகம் உள்ளிட்ட தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த வாரம் தொடங்குவதாக ECI தெரிவித்துள்ளது.

News October 24, 2025

சம்பளம் குறித்து நடிகை பிரியாமணி ஓபன் டாக்!

image

தன் சக நடிகரை விட தனக்கு குறைந்த சம்பளம் கிடைத்திருக்கிறது, ஆனால் அது தன்னை பாதிக்கவில்லை என நடிகை பிரியாமணி கூறியுள்ளார். தன்னுடைய சந்தை மதிப்பு என்னவென்று தனக்கு தெரியும் என்ற அவர், தகுதியான சம்பளத்தைதான் தான் கேட்பேன் எனவும் தெரிவித்துள்ளார். ஆனால், நடிகைகள் அதிக சம்பளம் கேட்பது தவறில்லை எனவும், ஆனால் தான் அதிகமாக கேட்கமாட்டேன் எனவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

error: Content is protected !!