News October 22, 2025

டெல்லியை கலங்கடித்த காற்று மாசு!

image

தலைநகரில் காற்று மாசு வழக்கமான ஒன்று. ஆனால், தீபாவளியன்று உச்சம் தொட்ட காற்று மாசு, கண்காணிப்பு நிலையங்களையே செயலிழக்க வைத்துள்ளது. 39 நிலையங்களில் வெறும் 9 மட்டுமே தரவுகளை பதிவு செய்துள்ளன, மற்றவை செயலிழந்துள்ளன. மாசு அளவு அதிக அளவை தாண்டும்போது (இந்திய வரம்பு= 60 µg/m³/பதிவானது 1,000 µg/m³), துல்லியமான தரவை பதிவு செய்ய முடியாத தொழில்நுட்ப வரம்பே இதற்கு காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

Similar News

News March 24, 2026

இருமுனை போட்டி தான்.. புது கணக்கு சொல்லும் சீமான்

image

திமுக – அதிமுக இடையே யார் அதிகமாக காசு கொடுக்கிறார்கள் என்பதில்தான் போட்டி என சீமான் விமர்சித்துள்ளார். திமுக அதிமுக, தவெக மூன்றுமே இலவசங்களை வாரி வழங்கி ஒரு பக்கத்தில் சூலாயுதமாக இருப்பதாக கூறிய அவர், தற்சார்பு வாழ்வியல், தற்சார்பு பொருளாதாரம் என்ற குறிக்கோளோடு நாதக அவர்களுக்கு எதிராக வேலாயுதமாக பாய்வதாக கூறியுள்ளார். இதனால், இந்த தேர்தலில் இருமுனை போட்டிதான் எனவும் பேசியுள்ளார்.

News March 24, 2026

தேர்தல் கருத்துக்கணிப்பு.. சற்றுமுன் அறிவிப்பு

image

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட ECI கட்டுப்பாடு விதித்துள்ளது. புதுச்சேரி, கேரளா, அசாமில் ஏப்.9-ம் தேதியும், TN-ல் ஏப்.23-ம் தேதியும், மேற்கு வங்கத்தில் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஏப்.29-ம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை கருத்துக்கணிப்புகளை எந்த வடிவிலும் வெளியிடக் கூடாது என ECI உத்தரவிட்டுள்ளது.

News March 24, 2026

BREAKING: விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு

image

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6 தனித் தொகுதிகளிலும், 2 பொதுத் தொகுதிகளிலும் விசிக ‘பானை’ சின்னத்தில் போட்டியிட உள்ளது. 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்ற விசிக, தற்போது கூடுதலாக 2 தொகுதிகளில் களமிறங்க உள்ளது. முன்னதாக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்டு திருமாவளவன் அழுத்தம் கொடுத்து வந்தார்.

error: Content is protected !!