News October 22, 2025
ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்; 7,267 காலி பணியிடங்கள்

மத்திய அரசு பள்ளிகளில் (EMRS) உள்ள 7,267 ஆசிரியர் & ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. B.Ed முடித்த 55 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் அல்லாதவர்களுக்கு ₹18,000- ₹1,12,400 வரையும், ஆசிரியர்களுக்கு ₹35,400 – ₹2,09,200 வரையும் சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News April 10, 2026
‘ஜன நாயகன்’ காட்சிகளை ஷேர் பண்ணாதீங்க: KVN

‘ஜன நாயகன்’ படத்தின் சில காட்சிகள் லீக்கானது பரபரப்பை கிளப்பியது. இதுபற்றி தயாரிப்பு நிறுவனமான KVN வெளியிட்ட அறிக்கையில், சட்டப்படி விசாரணை தொடங்கியுள்ளதாகவும், குறிப்பிட்ட அந்த காட்சிகளை SM-ல் பகிர்வது சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்துள்ளது. இந்த சட்டவிரோத செயலுக்கு மக்கள் துணை போக வேண்டாம் எனவும், எதையும் ஷேர் பண்ண வேண்டாமெனவும் KVN கேட்டுக் கொண்டுள்ளது.
News April 10, 2026
BREAKING: தங்கம்.. அதிரடி உத்தரவு

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், ₹50,000-க்கு மேல் பணம் மற்றும் தங்க நகைகளை எடுத்துச் செல்ல கட்டுப்பாடுகள் உள்ளன. இதனை பரிசீலித்து தளர்வு அளிக்குமாறு பிரபல நகைக்கடை சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை சட்டப்படி பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News April 10, 2026
மாம்பழம் சின்னம் விவகாரம்.. ராமதாஸ் மனு தள்ளுபடி

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு விட்டதால், மனு செல்லத்தக்கது அல்ல என ECI தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல், ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் சிலிண்டர் சின்னத்தை ஏற்றுக்கொண்டதாக, அன்புமணி தரப்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட கோர்ட் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.


