News October 22, 2025
டிரம்புக்கு நன்றி கூறிய PM மோடி

USA அதிபர் டிரம்ப் தொலைபேசி வாயிலாக தீபாவளி வாழ்த்து தெரிவித்ததற்கு PM மோடி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்த X பதிவில், இந்த ஒளியின் திருவிழாவில், நம் இருபெரும் ஜனநாயக நாடுகளும் உலகிற்கு நம்பிக்கையை ஒளிர செய்யட்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து நிற்போம் என்றும் அவர் கூறியுள்ளார். அதேநேரம், ரஷ்ய எண்ணெய் விவகாரம் குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
Similar News
News October 23, 2025
International Roundup: அணு ஆயுத பயிற்சியில் ஈடுபட்ட ரஷ்யா

*டிரம்ப் – புடின் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ரஷ்யா அணு ஆயுத பயிற்சியை மேற்கொண்டுள்ளது. *உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க ஸ்வீடன் முடிவு. *காஸா போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக இஸ்ரேல் PM நெதன்யாகுவை USA துணை அதிபர் ஜேடி வான்ஸ் சந்தித்தார். *உகாண்டா சாலை விபத்தில் 46 பேர் உயிரிழப்பு. *தென் கொரியாவிற்கு டிரம்ப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், வடகொரியா ஏவுகணை சோதனை.
News October 23, 2025
WWC: இங்கிலாந்தை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான WWC லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து 244 ரன்களை எடுத்தது. டாமி பியூமண்ட் 78 ரன்கள் அடித்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும், மற்ற வீராங்கனைகள் சொதப்பியதால் இங்கி., பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு அன்னபெல்(98), ஆஷ்லீ கார்ட்னர் (104) ஜோடி சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். 40.3 ஓவர்களில் இலக்கை எட்டி 5-வது வெற்றியை ஆஸ்திரேலியா பதிவு செய்தது.
News October 23, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க