News October 22, 2025
தஞ்சையில் முன்னாள் முதலமைச்சர் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே கோட்டூர் நெல் கொள்முதல் நிலையத்தை அஇஅதிமுக பொதுச்செயலாளரான, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் பார்வையிட்டு மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார். உடன் அதிமுக அமைப்பு செயலாளரான முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட அதிமுக நிர்வாகிகள் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News February 7, 2026
தஞ்சாவூரில் இன்று மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்

தஞ்சாவூா் அரண்மனை வளாகத்திலுள்ள அரசா் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் தமிழ்நாடு சவகா் சிறுவா் மன்றம் சாா்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் இன்று (பிப்.7) நடைபெறவுள்ளன. இப்போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகள், ஆதார் அட்டை நகல் உள்ளிட்டவற்றை எடுத்து வர வேண்டும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
News February 7, 2026
தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனந்தாள், தஞ்சாவூர், பாபநாசம், திருப்புறம்பியம் ஆகிய துணை மின் நிலையங்களில் இன்று (பிப்.07) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் பண்ணுங்க!
News February 7, 2026
தஞ்சை: பள்ளிகளுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு

2026-2027ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2026 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் பிப்.28ஆம் தேதி என ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க!


